அமெரிக்க பெண் மீது ஆவல்.. பாய்ந்த போலிச் சாமியாரை, பஞ்சராக்கிய பெண்மணி.. தி.மலையில் சிறப்பான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


ஆன்மீக நகரமாக இருக்கும் திருவண்ணாமலையில் வெளிநாட்டவரும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில், அமெரிக்க நாட்டினை சார்ந்த 31 வயது பெண்மணி, கடந்த 5 மாதத்திற்கு முன்னதாக திருவண்ணாலைக்கு வருகை தந்துள்ளார். இவர் அங்குள்ள அருணாச்சலா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார். 

இப்பகுதியில் பல சாமியார்களும் தங்கியிருந்த நிலையில், அமெரிக்க பெண்மணியை சாமியார் என்ற பெயரில் போலிசாமியார் அடிக்கடி நேரில் சந்தித்து சென்றுள்ளார். போலிசாமியாருக்கு பெண்ணின் மீதிருந்த மோகத்தால், அப்பெண்ணிடம் திருமணம் செய்து கணவன் மனைவியாக அமெரிக்காவில் வாழலாம் என்ற எண்ணத்திலும் இருந்துள்ளான். 

இந்நிலையில், சம்பவத்தன்று தங்கத்தினால் ஆன தாலி மற்றும் அரிவாளுடன் அமெரிக்க பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற காமுக சாமியார்,  பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான பெண்மணி, சாமியார் அடித்து நொறுக்கியுள்ளார். மேலும், சாமியார் அரிவாளால் வெட்ட முயன்ற நேரத்தில், அவரது அரிவாளை வாங்கி, சாமியாரின் மண்டையை பிளந்துள்ளார். 

இருவருக்கும் இடையேயான சண்டையில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சாமியாரை அடித்து நொறுக்கினர். இதன்பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளித்து, சாமியாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அந்த போலிசாமியார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலைப்பட்டி கிராமத்தை சார்த்த மாதேஸ்வரன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 34) என்பதும், அமெரிக்க பெண்ணை அடிக்கடி பார்த்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகலாம் என்ற நினைப்பில் பலவந்த பலாத்கார திருமண முயற்சி அரங்கேறியது தெரியவந்துள்ளது. 

மேலும், அமெரிக்காவில் வளர்ந்த பெண்மணிக்கு தற்காப்பு கலைகள் தெரிந்ததை அடுத்து, சாமியார் தரப்பிற்கு பலத்த சேதம் என்றும், காம இச்சையை தீர்க்க சென்ற சாமியாருக்கு, காமமே வராத அளவிற்கு அடி விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai America girl sexual abuse attempt police arrest Culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->