மதுபான கடையை திறக்க கூறி ஆர்ப்பாட்டம்.. பெண்கள் திரளாக பங்கேற்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்றும், இளைஞர்கள் மற்றும் எதிர்கால தலைமுறையை சீரழிக்கும் வழியில் இருந்து அரசு பின்வாங்கி, மாற்று பாதையில் அரசிற்கான வருவாயை ஏற்படுத்த முற்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. 

இந்த நிலையில், சில இடங்களில் மக்களே போராட்டம் செய்து அப்பகுதியில் உள்ள மதுபான கடையை மூட வலியுறுத்துவார்கள். சில இடங்களில் குடிமகன்கள் மதுபான கடையை திறக்க கூறி போராட்டம் நடத்துவார்கள். 

அந்தந்த இடங்களை பொறுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மதுபோதையில் வாகனம் இயக்கினால் தவறு என்பது அனைவரும் அறிந்த விஷயம். இவ்வாறாக மதுபான கடைகளை முதலில் மூடவைத்துவிட்டு, பின்னர் குடிமகன்கள் எங்கும் சென்று மது அருந்துவார்கள் என்று எண்ணியிருப்பார்கள். 

இதில் திடீர் திருப்பமாக கணவன்மார்கள் மாற்று இடத்திற்கு சென்று மதுபானம் அருந்தி வரும் வழியில், வாகனத்தை காவல் துறையினரிடம் வழங்கிய பின்னர், பழைய இடத்திலேயே மதுபான கடையை திறக்க பெண்கள் போராட்டம் செய்வார்கள். 

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் மதுபான கடையை திறக்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvallur woman and men protest about open wine shop


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->