அவசர ஊர்தி உதவி பணியாளர் கொரோனாவால் பலி.. திருப்பூரில் கண்ணீர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 22 வயது இளைஞர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் பகுதியில் 108 அவசர ஊர்தி உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக இவர் காய்ச்சல் காரணமாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். 

இவரை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர், கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில், இவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இளைஞருக்கு கொரோனா உறுதியான நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த இறப்பு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட முதல் இறப்பு ஆகும். மேலும், திருப்பூரில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பாகவும் இருக்கிறது. 

மேலும், 22 வயதாகும் அவசரஊர்தி உதவியாளர் கொரோனாவிற்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் பணிக்காக களத்தில் பணியாற்றி, உயிரை இழந்த இளைஞருக்கு அப்பகுதி மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur youngster died corona positive


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->