உடுமலை: தண்ணீர் தேடி குட்டியுடன் வந்த யானைகளை கற்களால் கொடூர எண்ணம் கொண்ட மானுட ஜீவிகள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் உடுமலை பகுதியில் 7 இளைஞர்கள் குட்டியுடன் வந்த 3 யானைகளை காட்டுப்பகுதியில் வைத்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சுற்றித்திரிந்த 7 இளைஞர்கள் கொண்ட கும்பல், கொடூரமாக யானைகளை கம்பு மற்றும் கற்களால் தாக்கும் பகீர் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பான வீடியோ பதிவுகளில், குட்டியுடன் 2 யானை தண்ணீர் தேடி காட்டுப்பகுதிக்குள் சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், இதன்போது அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் யானையை கண்டு கற்கள் மற்றும் கம்பால் விரட்டி விரட்டி தாக்குகின்றனர். 

யானையும் முதலில் பயந்து ஓட, பின்னர் இவர்கள் விரட்டி தாக்கிய கொடூரத்தால் ஆத்திரமடைந்து பதிலுக்கு அவர்களை தாக்க முயற்சிக்கிறது. யானையின் அளவை விட சிறார்கள் மற்றும் இளைஞர்கள் எறும்புபோல இருந்ததால், இளைஞர்களை சிறுது தூரம் விரட்டி வந்த யானை பின்னர் மீண்டும் மாற்று பாதையில் செல்கிறது. 

யானை மாற்று பாதைக்கு சென்றதும், பின்னாலேயே சென்று கொடூர இளைஞர்கள் தொடர்ந்து யானையை விரட்டி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த வீடியோ தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், யானையை தாக்கிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

இது போன்ற கொடூரர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனியார் ரெசார்ட்களை அதிகாரிகள் கண்காணித்து அங்குள்ள ஊழியர்களும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Udumalai Elephant Attacked by Culprit Youngster Video Trending Social Media 6 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->