கள்ளக்காதல் கொலைகளுக்கு பெயரெடுக்கும் திருப்பூர் மாவட்டம்.. நிர்கதியாய் தவிக்கும் பச்சிளம் பிள்ளைகள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டங்களில் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் அதிகளவு நடக்கும் நிலையில், குடும்ப உறவுகளை சிதைக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம், உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து செயல்படுங்கள் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் குண்டடம் காதபுள்ளப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றி வந்தவர் ரமேஷ். இவரது மனைவி சித்ரா. இதே தோட்டத்தில் மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், சித்ராவுக்கும் - மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது உறவினர் ஒருவருடனும், 17 வயது சிறுவனுடனும் சித்ரா தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சித்ரா, உறவினர், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை அடித்து கொலை செய்து குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த கொலை தொடர்பான விவகாரம் காவல் துறையினருக்கு தெரியவரவே, 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதனைப்போன்று, திருப்பூர் மாநகரில் தாயாருடன் தொடர்பில் இருந்த வாலிபரை மகன் தனது நண்பருடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தார். மேலும், உடலை மறைக்க பாறைக்குழிக்குள் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தார். இந்த விஷயம் தொடர்பாக தாய், மகன், நண்பர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல திருப்பூரில் அடிக்கடி பல கள்ளக்காதல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு கொலைகள் நடந்து வருகிறது. இந்த விஷயங்களில் பெற்றோர்களின் தவறுதலான செயல்பாடுகள் காரணமாக குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறியுடன் விடைதெரியாமல் நிற்கிறது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில், " கள்ளக்காதல் விஷயங்களில் நடைபெறும் திட்டமிட்ட கொலைகளுக்கு உள்ள தண்டனைகள் தொடர்பான விபரங்கள் பலருக்கும் தெரிவித்து இல்லை. குற்றம் உறுதியாகும் பட்சத்தில் 10 வருட சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும்.

காவல்துறையிடம் தற்போதுள்ள நவீன யுக்திகள் வாயிலாக கொலையாளிகளை உடனடியாக கைது செய்துவிடுகிறோம். அவர்களின் குற்றமும் உறுதி செய்யப்பட்டு வருடக்கணக்கில் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் பிள்ளைகள் தான் பச்சிளம் வயதில் ஒன்றும் புரியாமல் இருக்கின்றனர். அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் சோகம் இருக்கிறது. குடும்ப உறவுகளை சிதைக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் " என்று தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Police Says about Affair Murder Issue Cases They Advice Do not do it It Degenerate family


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->