திருப்பூர்: நொய்யலாற்றை தூர்வார வேண்டும் என் பொதுமக்கள் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


நொய்யலாற்றில் புதர்கள் அடந்து காணப்படுவதால் தூர்வாரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொய்யலாறு பல ஆண்டுகளாக தூர்வாரபடாமல் இருக்கின்றது. இதனால் நொய்யலாறு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற செடிகள் வளந்து புதர் மண்டி காணப்படுகிறது. அது மட்டுமின்றி சிலர் கழிவுகளையும் அங்கு வந்து கொட்டுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசிகிறது. இதனால் அங்குள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

அங்குள்ள மக்கள் இது குறித்து கூறுகையில்: நொய்யலாறு பல ஆண்டுகளாக பராமறிப்பின்றி இருக்கிறது. இதனால் அங்கு தேவையற்ற செடிகள் வளர்ந்து விச பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. அது மட்டுமின்றி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடித்தும் கொசு தொல்லை குறைந்தபாடில்லை என்று கூறினர்.

சுகாதார சீர்கேடுகள் அதிகம் இருப்பதால் நொய்யலாற்றை உடனடியாக தூர்வார வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Peoples Request to Clean Noyyal River


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->