திருப்பூர்: பப்பி லவ்வை வீட்டில் புகையவிட்டதால் சம்பவம்.. வாக்குவாதம் கைலப்பாகி கத்திக்குத்து.! - Seithipunal
Seithipunal


11 வயது சிறுமியின் காதலை வீட்டில் சொன்னதால், ஆத்திரமடைந்த காதலன் சிறுமியின் பெற்றோரிடம் போட்டுக்கொடுத்தவரிடம் மல்லுக்கட்ட, ஆத்திரமடைந்த நபர் சிறுமியின் காதலனை சரமாரியாக குத்திய சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியை சார்ந்தவர் சாரதி (வயது 19). இவர் அதே பகுதியை சார்ந்த 11 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். 11 வயதாகும் விபரமறியா சிறுமியும் சாரதியை காதலித்து வந்துள்ளார். 

இந்த காதல் விவகாரம், அப்பகுதியை சார்ந்த மதி என்பவருக்கு தெரியவரவே, மதி சிறுமியின் பெற்றோரை சந்தித்து விஷயத்தை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சாரதியை நேரில் அழைத்து கண்டித்துள்ளனர். மேலும், தங்களின் மகளையும் கண்டித்துள்ளனர். 

இதனால் ஆத்திரத்தில் இருந்த சாரதி, இந்த விஷயத்தை யார் தெரிவித்துள்ளார் என நோட்டமிட்டு, இதனை மதி சிறுமியின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து, மதியை நேரில் சந்தித்த சாரதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்த வாக்குவாதத்தினால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படவே, ஆத்திரமடைந்த மதி தான் மறைத்து எடுத்து வந்த கத்தியை எடுத்து சாரதியின் மீது சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் சாரதியின் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மதியை நோக்கி சத்தமிட்டபடி வரவே, பயந்துபோன மதி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சாரதியை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக நல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, மருத்துவமனைக்கு நேரில் சென்று சாரதியிடம் விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மதியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Love Issue 2 Man Fight Murder Attempt with Weapon Police Arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->