இந்தியன் வங்கிக்கு வரும் நபர்களிடம் லோன் மோசடி... வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சார்ந்தவர் துரைராஜ். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், டிப்டாப் உடையுடன் சுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், தினமும் வியாபாரத்தை முடித்துவிட்டு வங்கியில் பணம் செலுத்தும் சிறு வியாபாரிகளை பார்த்து, தான் வங்கியில் தற்காலிக முதன்மை தொழிலாளர் நல அலுவலராகப் பணியாற்றி வருவதாகவும் கூறினான். 

குறைந்த வட்டிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கடனை பெற்றுத்தர முன்பணம் தர வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று வந்துள்ளான். இதுமட்டுமல்லாது சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வீட்டிற்கு காரில் சென்று ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவற்றையும் வாங்கி வந்துள்ளான். 

இப்படியாக மொத்தம் ரூ.10 இலட்சம் வரை வசூல் செய்ததை தொடர்ந்து தலைமறைவாகியுள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருப்பூரில் வைத்து துரைராஜை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Loan Cheating man Arrest Police investigation 23 Dec 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->