கடனை செலுத்த கூறி ஆக்சிஸ் பேங்க் டார்ச்சர்.. உயிரை விட்ட திருப்பூர் விவசாயி.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் பகுதியில் உள்ள குழந்தைபாளையம் பகுதியை சார்ந்தவர் ராஜாமணி (வயது 55). இவர் தாராபுரத்தில் செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கியின் கிளையில் கடந்த 2012 ஆம் வருடத்தில் ரூ.11 இலட்சம் விவசாய கடன் பெற்றுள்ளார். 

இந்த வங்கிக்கு தவணை தொகையை முறையாக செலுத்தி வந்த நிலையில், சில வருடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட வறட்சி காரணமாக விளைச்சல் சரிவர நடைபெறவில்லை. இதனால் தவணைத்தொகையை சரிவர செலுத்த இயலாது தவித்து வந்துள்ளார். 

இந்த சூழலில், வங்கியின் கடன் வசூல் அதிகாரிகள் விவசாயி ராஜாமணியின் இல்லத்திற்கு சென்று கடன் தொகையை கட்ட சொல்லி வற்புறுத்தி இருக்கின்றனர். இதனால் ராஜாமணி கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று தோட்டத்தில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை உட்கொண்டு தோட்டத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இவரை மீட்ட பொதுமக்கள், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur former suicide due to bank loan torture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->