விஜயனின் திருப்பூர் விஜயத்தால் கரப்பான் பூச்சிபோல கவிழ்ந்த காவல்துறை வாகனம்.. குடிகார சுப்பனின் அட்டகாசங்கள்.! - Seithipunal
Seithipunal


காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனத்தை திருடிச் சென்ற குடிமகன், சாலையில் சென்று விபத்திற்குள்ளாக்கிய சம்பவம் நடந்துள்ளது. 

திருப்பூரில் உள்ள தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வந்திருந்த உதவி ஆணையரை, காவல் ஆய்வாளர் தினேஷ் வரவேற்ற நிலையில், இருவரும் வழக்கு விவரங்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில், காரில் வந்து இறங்கிய உதவி ஆணையரின் கார் ஓட்டுனர் ராஜகுரு, காவல் நிலையத்திற்கு வெளியே வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது வாகனம் காணவில்லை. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்கையில், மது போதையில் தள்ளாடியபடி வந்த மர்ம ஆசாமி வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இந்த வாகனம் ஊத்துக்குளி சாலையில் சென்று சென்றிருந்த நிலையில், தாறுமாறாக ஓடி லாரி ஒன்றில் மோதி உருண்டு விபத்துக்குள்ளாகியது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காரை ஓட்டி வந்த நபரை மீட்டு, அவசர உதவிக்கும் தகவல் தெரிவித்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், விபத்திற்குள்ளாகிய வாகனத்தில் இருந்த வாக்கி டாக்கியில் காவல் துறை வாகனம் மதுபோதை மர்ம ஆசாமியால் திருடப்பட்டு விட்டதாகவும், அது ஊத்துக்குளி சாலை வழியாக செல்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் தான் விபத்திற்குள்ளாகிய காவல்துறை வாகனம் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. 

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவன் திருவண்ணாமலையை சேர்ந்த விஜயன் என்பதும், மது போதை ஆசாமி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், திருப்பூருக்கு வேலை தேடி வந்த சமயத்தில், போதையில் காவல்துறை அதிகாரிகளின் வாகனத்தை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Culprit Robberies police Car And make Accident Vehicle Fully Damaged 28 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->