காதலிக்க சொல்லி தொல்லை.. காதலை ஏற்க மறுத்த +2 மாணவி கொலை முயற்சி.. கொடூரன் பயத்தில் தூக்கிட்டு செத்தான்.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த கொடூரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியைச் சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, அங்குள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக அவர் வீட்டிலேயே இணைய வழியாக கல்வி பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், இதே பகுதியைச் சார்ந்தவன் சசிகுமார். இவன் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இவனது காதலை மாணவி தொடர்ந்து ஏற்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் சம்பவத்தன்று ஒரு பெரும் திட்டத்தோடு மாணவியை பார்க்க சென்றுள்ளான். 

மாணவியின் வீட்டிற்கு சென்ற கொடூரன், மாணவியிடம் இறுதியாக பேச வேண்டும் என்று அங்குள்ள மைதானத்திற்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்த கொடூரன், மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். 

சசிகுமார் தலைதெறிக்க ஓடுவதை கண்ட பொதுமக்கள் மைதானத்திற்குள் சென்று பார்க்கையில், மாணவி கழுத்தறுபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து, விபரீதத்தை புரிந்துகொண்ட காவல் துறையினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பயத்தில் இருந்த சசிகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வாணியம்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சசிகுமார் கத்தியுடன் மைதானத்திற்கு சென்றிருந்தது, அவன் முன்னதாகவே கொலைக்கு திட்டமிட்டு சென்றதை உறுதி செய்துள்ளது. 

பெண்கள் தங்களின் காதலன் அழைக்கிறான், காதல் தொல்லை கொடுத்தவன் அழைக்கிறான்., இறுதியாக அவனிடம் பேசி விலகிவிடலாம் என்ற எண்ணத்தில் தனியாக செல்ல வேண்டாம். கொடூரனின் எண்ணங்கள் எதுவும் தெரியாமல் தங்களின் உயிரை இழக்க வேண்டாம். 

உங்களின் பாதுகாப்புக்கு கையில் ஆயுதத்தை எடுத்து செல்லுங்கள். தனிமை பகுதியில் எதோ ஒரு நம்பிக்கையில் செல்லும் உங்களுக்கு அதுவே சிறந்தது. ஏதேனும் ஒரு சூழ்நிலையில் உங்களை கொடூரன் கொலை செய்ய முயற்சித்தால், உங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் எதிரியை வீழ்த்த சட்டமே இடம் கொடுத்துள்ளது என்பதை மறக்க வேண்டாம். உங்களின் தரப்பில் நியாயம் இருந்தால் நீங்கள் சட்டத்தாலேயே விடுதலை செய்யப்படுவீர்கள்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Vaniyambadi School Girl student Murder Attempt Culprit Suicide 13 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->