மகளுக்கு பாலியல் தொல்லை.. கள்ளக்காதலனை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த பெண்..! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வெள்ளக்குட்டை விவசாய கிணற்றில், சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், கொலையானவர் ஆலங்காயம் பொத்தூர் பகுதியை சார்ந்த நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது. அவரது அலைபேசி எண்களை ஆய்வு செய்கையில், கணவனை இழந்த பெண்கள் கோகிலா என்பவருடன் பேசி வந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கோகிலாவிடம் நடைபெற்ற விசாரணையில், நாகராஜ் கொலையில் உள்ள மர்மம் விலகியுள்ளது. மேலும், கணவரை இழந்து வாழும் கோகிலாவுக்கு, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 8 வருடமாக நாகராஜன் காதலோடு பழகி வந்துள்ளார். 

இதனை சாதகமாக பயன்படுத்திய நாகராஜ், கோகிலாவின் இரண்டு மகள்களிடமும் தனது சேட்டையை காண்பித்துள்ளான். இது தொடர்பாக கோகிலா பலமுறை நாகராஜை எச்சரித்தும், கண்டுகொள்ளாமல் சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கோகிலா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வெங்கடேசனிடம் தெரிவிக்கவே, ஏற்கனவே கோகிலாவிடம் சகோதரத்துவத்துடன் அன்பாக பழகி வந்த வெங்கடேசன், நாகராஜை தீர்த்துக்கட்ட சம்மதம் தெரிவித்துள்ளார். 

சம்பவத்தன்று மதுவாங்கி வெங்கடேசனும், நாகராஜும் மது அருந்தி, நாகராஜிற்கு போதையேறிதும் வெங்கடேசன் மற்றும் கோகிலா சேர்ந்து கல்லால் அடித்துக்கொலை செய்து, பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி விவசாய கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். 

இந்த கொலையில் ஈடுபட்ட கோகிலா மற்றும் வெங்கடேசனை கைது செய்த நிலையில், தந்தையும் இறந்து, தாயும் சிறைக்கு சென்று விட்டதால் கோகிலாவின் மகன்கள் மற்றும் மகள்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Vaniyambadi Affair Sexual Torture Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->