திருப்பத்தூர்: அப்பனும், மகனுமான 2 அல்லக்கையுடன் அரைபோதையில் காவல் நிலையத்தில் தகராறு..! - Seithipunal
Seithipunal


அப்பா மற்றும் மகன் சேர்ந்து குடித்துவிட்டு காவல் நிலையத்தில் சென்று காவல்துறையினரை அவதூறாக பேசிய சம்பவம் நடந்துள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் பகுதியைச் சார்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் புருஷோத்தமன். இதே பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மற்றும் பாலாஜி. இவர்கள் அனைவரும் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரும் கலைந்து செல்லும்படி எச்சரித்துள்ளார். 

அந்த நான்கு பேரும் மதுபானம் அருந்திவிட்டு காவல்நிலைய வாசலில் வந்து தகராறு செய்துள்ளனர். காவல்நிலையத்தில் காவல் அதிகாரிகளிடம் தள்ளாடிய போதையில் ஒருவர் எம்.எல்.ஏ பெயர், ஒருவர் எம்.பி. பெயர், ஒருவர் அரசியல் கட்சி பெயர் என்று கூறி மிரட்டி இருக்கின்றனர். 

மேலும், கேஸ் போடுவியா? கவலையே இல்லை., உன்னால என்ன பண்ண முடியும்?., என்று கூறி தகராறு செய்த நிலையில், ஒரு பெண் காவல் அதிகாரியை பார்த்து நீங்கள் எனது அம்மா போல., நான் உங்களது மகன் போல என் மீது வழக்கு பதிய கூடாது என்று கனிவாக பேசுவதுபோல விரலை காண்பித்து மிரட்டி இருக்கிறான்.

நான்கு பேரிடமும் பக்குவமாக பேசிய காவல்துறையினர், வீட்டுக்கு அனுப்பி வைத்து நிலையில், வீட்டிற்கு செல்வதற்குள் ஆட்டோ ஸ்டாண்டில் மீண்டும் தகராறு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தந்தை மகன் நரசிம்மன் மற்றும் புருசோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Police Threatening By Drunken Culprits 29 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->