திருப்பத்தூர்: தென்னந்தோப்பிற்குள் ஸ்கேன் சென்டர்.. தூண்டில் போட்டு தூக்கிய அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள தென்னந்தோப்பில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர் அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த நிலையில், ஏன் இந்த பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது? என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித்திட்ட இயக்குனரக அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். 

இந்நிலையில், கந்திலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் ஸ்கேன் மையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாகவும், குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கருக்கலைப்பு செய்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில், 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவரின் உதவியுடன் ஊரக நலப்பணி அதிகாரிகள் அலைபேசி எண்ணை கொடுத்து பேசவைத்தனர். மறுமுனையில் பேசிய பெண்மணி 3 மணிநேரம் காத்திருக்க வைத்து, அங்குள்ள தென்னந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார். 

தென்னந்தோப்பிற்குள் சென்றதும் அலைபேசியை அணைத்துவைக்கப்ட்ட நிலையில், குழந்தையின் பாலினத்தை சோதித்து ஆண் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அதிரடியாக தென்னத்தோப்பிற்குள் நுழைந்த அதிகாரிகள் அங்கிருந்த சதிஷ் குமார் என்பவரை பிடித்தனர். அதிகாரிகள் வந்ததும் கம்பி நீட்டிய இளவரசி என்ற பெண்மணி மற்றும் போலி சுகுமாரனையும் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Fake Scan Center Broker Arrest by Police 7 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->