கல்லூரி மாணவியை திருமணத்திற்கு வற்புறுத்தி கொலை மிரட்டல்.. திமுக பிரமுகர் மகனின் மீது பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடியில் திருமணம் செய்துகொள்ள கூறி கொலைமிரட்டல் விடுத்துள்ள திமுக பிரமுகர் மகன் மீது மாணவி புகார் அளித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை சார்ந்த திமுக பிரமுகரின் மகனின் மீது, கல்லூரி மாணவி திருமணம் செய்து கொள்ள கூறி திமுக பிரமுகர் மகன் கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சி.என் நியூட்டன் தெருவை சார்ந்த தொழிலதிபர் இராஜாமணி. இவரது மகள் நித்யா. நித்யா பி.காம் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். இந்நிலையில், தொழிலதிபர் இராஜாமணியின் மகள் நித்யாவை ஆம்பூர் பேட்டை பகுதியை சார்ந்த திமுக மீனவர் அணி செயலாளர் ஸ்ரீதர் என்பவரின் மகன் சரவணனுக்கு பெண் கேட்டு வந்துள்ளனர். 

இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நித்யா மற்றும் நித்யாவின் தந்தை ராஜாமணி ஆகியோரை திமுக பிரமுகர்களை வைத்து ஸ்ரீதர் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் பலனில்லை. 

இந்நிலையில், இன்று பெண்மணி வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு சென்று, காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த பசுவிடம் மனுவை வழங்கி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஸ்ரீதர் மற்றும் அவரது மகன் சரவணன் பலமுறை பெண்ணின் குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும், பெண்ணின் வீட்டிற்கே சென்று அவரின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்த நிலையில், வீட்டில் இருந்த ரூ.10 இலட்சத்தையும் களவாடி சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur DMK Supporter Threatening Force College girl to Marriage 21 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->