திடீரென வயலில் இறங்கி நாற்று நட்ட மாவட்ட ஆட்சியர்.. குவியும் பாராட்டு.!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் அருகே மாவட்ட ஆட்சியர், அவரது மனைவியரும் விவசாய நிலத்தில் இறங்கி நாற்று நட்டனர். இதற்கு பல தரப்பில் இருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி உள்ளதால், விவசாய நிலத்தில் நாற்று நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். திருப்பத்தூர் அருகே மூக்கனுார் கிராமத்தில் நாற்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். 

அப்போது அவரது மனைவி நாற்று நடுவதை ஆச்சரியத்துடன் பார்த்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா வயலில் இறங்கி சேறு, சகதி என்றும் பார்க்காமல் நாற்று நட்டார். இதை பார்த்த அவரது மனைவி வயலில் இறங்கி நாற்று நாட்டார். ஒரு மணி நேரம் மட்ட ஆட்சியர் மற்றும் அவரது மனைவி நட்டு நட்டனர். இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupattur collector for seedling planting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->