அ.ம.மு.க பிரமுகர் கொலை வழக்கு.. திமுக பிரமுகர் தனது 2 மனைவி, 4 கூட்டாளிகளுடன் கைது.! - Seithipunal
Seithipunal


கவுதமபேட்டை அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக கட்சி பிரமுகர், அவரின் இரண்டு மனைவிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதமபேட்டை பகுதியை சார்ந்தவர் வானவராயன் (வயது 30). இவர் திருப்பத்தூர் மாவட்டத்தின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி செயலாளராக இருந்து வந்தார். இதனைத்தவிர்த்து பைனான்ஸ் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இந்த விஷயம் தொடர்பாக திருப்பத்தூர் நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இதில், கவுதமபேட்டை பகுதியை சார்ந்த சங்கர் (வயது 62) என்பவன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வானவராயனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், சங்கரின் மனைவிகள் வசந்தா (வயது 52), சாந்தி (வயது 55), மகள் சர்மிளா (வயது 34), சங்கரின் தங்கை மகன் தனுஷ் (வயது 25), ஜெயபால் என்பவரின் மகன் ஆகாஷ் (வயது 26), ஆட்டோ ஓட்டுநர் சவுதாரி (வயது 24) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், சங்கருக்கும் - வானவராயனுக்கும் இடையே கடந்த 2016 ஆம் வருடம் முதல் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், மோதல் தொடர்ந்து வந்ததால் வானவராயனை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று கொலைத்திட்டத்துடன் காத்திருந்த சங்கர் மற்றும் அவரது கும்பல் வானவராயனை கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 

இதில், சங்கர் வேலூர் மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மற்றும் மனைவி சாந்தி திருப்பத்தூர் நகராட்சியின் முன்னாள் திமுக துணை தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur AMMK Supporter Murder Case DMK Supporter Arrest with 2 Wife and 4 Additional Supporters


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->