ஆம்பூர் அ.ம.மு.க பிரமுகர் கொலை வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.. கைதான மனைவி, மாமியார்.. பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ஆலங்குப்பம் பகுதியை சார்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 43). இவர் மாதனூர் அ.ம.மு.க மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெயந்தி அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதியன்று ஆலங்குப்பத்தில் இருந்து பாலாறு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் அருகே ரமேஷ் பிணமாக கிடந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், ரமேஷின் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி, உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், ரமேஷ்பாபுவைகொலை செய்த ஆம்பூரை அடுத்துள்ள மிட்டாளம் கிராமத்தை சார்ந்தவர் கவுதம் (வயது 20) மற்றும் ரெங்கபுரம் கிராமத்தை சார்ந்த தனுஷிராஜ் (வயது 23) ஆகியோரை கைது செய்தனர். மேலும், ரமேஷ் பாபுவின் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி ஆகியோரையும் கொலை செய்தனர். 

இந்த கொலைக்கான வாக்குமூலத்தில், எனது கணவர் ரமேஷ், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். மதுபோதையில் தினமும் என்னை சந்தேகமுற்று கொடுமைப்படுத்தி வந்தார். எனது அலைபேசியை வாங்கி, அழைப்புகள் குறித்து கேட்டு கொடுமைப்படுத்தினார். இந்த விஷயம் தொடர்பாக எனது தாயாரிடம் தெரிவித்தேன். 

பின்னாட்களில் எனது கணவரின் கொடுமை தொடர்ந்து அதிகரித்து வந்தால் அம்மா மற்றும் உறவினரின் உதவியுடன் கணவரை கொலை செய்து, ஒருமாத திட்டத்தை அரங்கேற்றினோம். கார் ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கையில் அவர் உயிருடன் தப்பிவிட்டார். இதன்பின்னர் பாலாற்றுக்கு வரச்சொல்லி கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur AMMK Party member murder case police arrest wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->