#Breaking: தோல் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி., 2 பேர் கவலைக்கிடம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் என்.ஏ.ஹாசிம் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அடைப்பை சரி செய்ய ரமேஷ், இரத்தினம், பிரகாஷ் ஆகிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ரமேஷ் என்பவர் கழிவுநீர் தொட்டியில் அடைப்பை சுத்தம் செய்துள்ளார். இதன்போது, விஷ வாயு தாக்கி அவர் மயங்கி உள்ளேயே விழவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இரத்தினம் உள்ளே இறங்கி சென்றுள்ளார்.

அவரும் விஷ வாயு தாக்கி மயங்க, பிரகாஷ் உடனடியாக பிற பணியாளர்களுக்கு தகவலை தெரியப்படுத்தி, விரைந்து உள்ளே சென்று இரத்தினத்தை மேலே தூக்கி வந்துள்ளார். விரைந்து வந்த ஊழியர்கள் தொட்டிக்குள் நீரை பாய்ச்சி அடித்து, ரமேஷின் உடலை மீட்டு வந்துள்ளனர். 

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய மூவரும் மயக்க நிலையில் இருக்கவே, உடனடியாக அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ரமேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இரத்தினம் மற்றும் பிரகாஷுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இரத்தினத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பிரகாஷ் சுய நினைவு இல்லாமல் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாதுகாப்பு உடையுடன் பணிகள் நடைபெற்றதா? அல்லது அலட்சியமாக பணிகளை செய்தார்களா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Ambur Leather factory Toxic Gas Attack During Drainage Cleaning 1 Died 2 Risk Condition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->