பல்லு போன 65 வயது கிழவிக்கு பக்கோடா சாப்பிட ஆசை.. டிபி பார்த்து ஏமார்ந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகங்கள்..!    - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகர பகுதியை சார்ந்த வாலிபரின் அலைபேசிக்கு தொடர்பு கொண்ட பெண்மணி பேசியுள்ளார். பெண்மணியின் குரலில் மயங்கிப்போன வாலிபர், அடிக்கடி அந்த அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். 

இந்நிலையில், வாலிபரின் எண்ணிற்கு பெண்மணி புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்து அது நான் என்று கூறியுள்ளார். அழகான இளம்பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பி வைத்த நிலையில், வாலிபர் பெண்ணை காதலித்துள்ளார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து, வாலிபர் தனது குடும்பத்தாருடன் பெண்ணை நேரில் பார்த்து நிச்சயம் செய்ய புறப்பட்டு சென்ற நிலையில், அந்த முகவரியில் 65 வயது மூதாட்டி இருந்துள்ளார். அவர் காதலியின் மூதாட்டியாக இருக்கலாம் என முதலில் நினைத்த நிலையில், விசாரணையில் இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல பேசியதே அவர் தான் என்பது தெரியவந்தது. 

இதனால் வாலிபர் இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, அந்த பெண்மணி (மூதாட்டியிடம்) யாரும் ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், அது மூதாட்டியின் இளமைக்கால புகைப்படம் இல்லை என்றும், தங்களின் குடும்பத்தை சார்ந்த பெண்ணின் புகைப்படம் என்றும் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வாலிபர் மற்றும் மூதாட்டியை பிடித்து விசாரணை செய்த நிலையில், மூதாட்டி பணிப்பெண்ணாக வேலை செய்த பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பி பேசி வந்தது தெரியவந்துள்ளது. 

மூதாட்டியை கடுமையாக எச்சரித்த காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்த நிலையில், உண்மை தெரியாமல் சமூக வலைத்தளத்தில் பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்த வாலிபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli youngster Cheated by Aged Lady Using House Worker young girl Photo


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->