ஜாதிக்கொலைகளுக்கு பெயரெடுக்கும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள்.. ஆட்டத்தை தொடங்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


அடுத்தடுத்து அரங்கேறும் ஜாதி ரீதியான படுகொலைகளை தடுக்க, ரவுடிபட்டியலை தயார் செய்துள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி காவல்துறை அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதமாக ஜாதிகள் ரீதியான படுகொலைகள் அரங்கேறி வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் 10 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் குறிப்பிட்ட சமுதாயங்களுக்கு இடையே பெரும் பிரச்சனை, கொலை வரை சென்று அங்குள்ள மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாகைக்குளம் பகுதியை சார்ந்த முத்து மனோ என்பவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்தே 7 பேர் கொண்ட எதிர்தரப்பு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக 7 பேரை கைது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கு பழி வாங்க கட்டிட ஒப்பந்தத்தார் கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். 

கண்ணனுக்கும் - முத்துமனோவுக்கும் எந்த விதமான பிரச்சனையும் இல்லாத நிலையில், எதிர்தரப்பு சமூகத்தாரை கொலை செய்ய இந்த கொலை நடந்தது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனைப்போல, நகை - பணத்திற்கு கொலை, முன்விரோத தகராறு என தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி அன்பு தலைமையிலான அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் 5 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவழக்குகளில் உள்ள ரவுடிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. 

இவர்களை கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவது போல தெரிந்தால் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, கோழி அருள் என்ற தென்காசியை சார்ந்த ரவுடியை காவல் துறையினர் கைது செய்தனர். கோழி அருள் மீது 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ரவுடிபட்டியல் தவிர்த்து 10 பேர் கஞ்சா கடத்தியவர்கள் மற்றும் பல குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் என 56 பேரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், அவர்களின் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாதி ரீதியான கொலைகள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் இதுபோன்ற தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Thoothukudi Police Special Branch Arrest List Rowdies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->