#Breaking: தாமிரபரணியில் உச்சகட்ட வெள்ளப்பெருக்கு... நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு.! நிவாரண பணிகள் மேற்கொள்ள ஆணை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் நிரம்பி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பாய்வதால், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்ல தெய்வச்செயல்புரம் பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

தற்போது திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதையாத்திரை மூலமாகவும், வாகனங்கள் மூலமாகவும் செல்லும் காலம் என்பதால், பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெல்ல பாதிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும், இந்த பணிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி ஆகியோர் கவனிக்குமாறும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பயிர் சேத விபரங்கள் தொடர்பான தகவலை சேகரிக்குமாறும், பயிர் சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Thamirabarani River Reach Dangerous Extreme Flood Situation due to Heavy Rain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->