#Breaking: காவல் அதிகாரியின் தலையே சிதைத்துள்ளது.. தென்மண்டல ஐஜி பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் இரட்டைக்கொலையில் ஈடுபட்ட ரவுடி கும்பலை பிடிக்க காவலர்கள் சென்றபோது அவர்கள் மீது ரவுடி கும்பல்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் ரவுடி துரைமுத்து என்ற ரவுடி வீசிய நாட்டு குண்டு காவலர் சுப்பிரமணியன் மீது விழுந்தது.

இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வெடி குண்டு வீசிய சம்பவத்தில் அங்கிருந்த மேலும் சில காவலர்கள் காயமடைந்தனர். இதையடுத்து காவலர் சுப்பிரமணியன் மீது நாட்டு குண்டு வீசிய ரவுடி துரைமுத்துவை போலீசார் என்கவுன்டர் செய்ததாக கூறப்பட்டது.

காவலர் சுப்பிரமணியம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட பண்டாரவிளை கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர் ஆழ்வார் திருநகரி காவல் நிலையங்களில் பணியை தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில்தான் தனிப்பிரிவு காவலராக மாற்றப்பட்டார். 

சுப்பிரமணியம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து மீது பல வழக்குகள் உள்ளன. ஏரலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலையில் ரவுடி துறைமுகத்திற்கு தொடர்பு இருந்துள்ளது. இந்த வழக்கில்தான் ரவுடி துரைமுத்துவை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இதையடுத்து வல்லநாடு மலைப் பகுதியில் துரைமுத்து பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அங்கு போலீசார் சென்றபோது தான் இந்த வெடிகுண்டு வீசசு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுப்பிரமணியம் கொல்லப்பட்டதால் அவரது சொந்த கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். தமிழக முதல்வரும் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் மற்றும் அரசு பணி ஆகிய நிவாரணமும் அறிவித்து, இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தென்மண்டல ஐஜி முருகன் பாளையங்கோட்டையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " துரைமுத்துவை காவல்துறையினர் விரட்டி சென்றனர். துரைமுத்து கையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். காவல்துறையினர் தொடர்ந்து துரத்தி சென்ற நிலையில், சுப்பிரமணியன் துரைமுத்துவை பிடித்து, இருவரும் கட்டிஉருண்டுள்ளனர். 

இந்த சூழ்நிலையில், துரைமுத்து கையில் எடுத்திருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதால், காவல் அதிகாரி சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பாதி தலை சிதைந்து பலியானார். துரைமுத்து படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார். இந்த கொடூர கொலையில் காவல் அதிகாரி சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்துள்ளார். தமிழக முதல்வரும் உதவித்தொகை அறிவித்துள்ளார். 

கைதானவர்களில் சுடலைக்கண்ணன் என்பவர் வனத்துறையை சார்ந்தவர். கைதானவர்களை பொறுத்த வரையில் துரைமுத்துவின் தம்பி சாமிநாதன், சுடலைக்கண்ணன், சிவராமலிங்கம். சுடலைக்கண்ணன் துரைமுத்துவிற்கு உறவினர் ஆவார். காவல்துறையினர் குண்டுவீச்சில் காவல் அதிகாரி உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் தவறானது. அவ்வாறு காவல் துறையினர் குண்டு வீசியிருந்தாலும், காவல் அதிகாரி இறந்திருக்க மாட்டார். 

துரைமுத்துவின் வெடிகுண்டு வீச்சிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். குற்றவாளிகள் நால்வரும் அடுத்த திட்டத்தை நிறைவேற்ற காத்திருப்பதாக தகவல் வெளியானது. இதன் பேரில் தேடுதல் வேட்டை நடந்தது. இதன்பின்னர் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கைதான மூவரிடமும் இருந்து அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. 

காவல் துறை அதிகாரிகள் முழு பாதுகாப்புடன் சென்றிருந்தனர். இதில், இரண்டு காவல் அதிகாரிகள் குற்றவாளியை துரத்தி ஓடுகையில், கைத்துப்பாக்கியை உபயோகம் செய்திருந்தால், காவல் அதிகாரிகளும் பலியாகும் துயரம் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் காவல் அதிகாரிகள் துப்பாக்கியை உபயோகம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது. குற்றவாளிகள் கையில் கையெறிகுண்டை வைத்திருப்பார்கள் என்று எண்ணி பார்க்கவில்லை. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Police South Zone IG Murugan press meet 18 Aug 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->