17 வருடத்திற்கு பின்னர் திறக்கப்பட்ட நெல்லையப்பர் கோவிலின் 4 வாயில்கள்..! - Seithipunal
Seithipunal


தெந்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமாக திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். 

இந்த கோவிலின் வடக்குப்புற வாசலில் கடந்த 2004 ஆம் வருடத்தில் கொலை நடைபெற்றதால், பாதுகாப்பு கருதி கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

கிட்டத்தட்ட கடந்த 17 வருடமாக அந்த 3 வாயில்களும் பூட்டியே கிடந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நெல்லையப்பர் கோவிலில் சமீபத்தில் ஆய்வு செய்தார். இதன்போது, பக்தர்கள் கோவிலில் பூட்டியுள்ள வாயில்கள் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உடனடியாக கதவுகளை திறக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நெல்லையப்பர் கோவிலின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டன. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டது. 
 
3 வாயில்களும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், 17 வருடத்திற்கு பின்னர் நெல்லையப்பர் கோவில்களின் நான்கு வாசலும் திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அவ்வழியாக தரிசனம் செய்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Nellaiyappar Temple 4 Doors Open after 17 Years


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->