#Breaking: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


நிலநடுக்கம் என்பது பெரும்பான்மையான மேலை நாடுகளில் உள்ள மக்களால் நன்கு அறியப்பட்டதாகவும். ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தாக்கத்தின் சோகம் பல ஆறாத வடுக்களாக இருந்து வருகிறது. 

கடந்த சில வருடமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளிலும் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இந்தியாவின் மும்பை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், அசாம், குஜராத் போன்ற மாநிலத்திலும் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகிறது.

இந்நிலையில், தற்போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை சுமார் 3.40 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 5 வினாடிகள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோர பகுதிகளான இடிந்தகரை, கூடங்குளம், பெருமணல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் சுற்றுவட்டாரத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Kanyakumari District Beach Side Peoples Observe Earthquake 5 Seconds 29 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->