ஆயிரம் பொய் சொல்லி கண்ணாலம் பண்ணலாம்.. ஒரேயொரு பொய்யால் 4 மாதத்தில் சிக்கிய போலி என்.ஐ.ஏ டி.எஸ்.பி..! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்காக தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி என்று கூறிக்கொண்ட பொறியியல் பட்டதாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு வழிப்பாதையில் வந்த காரை மடக்கிய காவல் துறையினர், காரில் வந்த நபரிடம் ஆவணங்களைக் கேட்டு விசாரித்தனர். 

அந்த வாகனத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் என்று எழுதப்பட்டிருந்த நிலையில், நான் தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி என்றும், எனது காரை மடக்குகிறீர்களா? என்றும் காவல் துறையினரிடம் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். 

அவரது தோற்றம் மற்றும் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட காவல்துறை அதிகாரிகள், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற விசாரிக்கையில், அவரது பெயர் மெல்வின் ஜெயக்குமார் என்பதும், குருந்துடையார்புரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

மேலும், பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மெல்வின் ஜெயக்குமார், டெல்லி சென்று எம்.ஏ கிரிமினாலஜி பயின்றுள்ளார். படிப்பு முடித்துவிட்டு அங்கேயே வேலையை தேடிய நிலையில், ஊடரங்கால் வேலை ஏதும் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து, சொந்த ஊருக்கு வந்த அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், வேலை ஏதும் இல்லாதவர்க்கு எப்படி பெண் தேடுவது என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை அவமானமாக நினைத்த மெல்வின் ஜெயக்குமார், சில காலங்கள் கழித்து தேசிய புலனாய்வு முகமையில் வேலை கிடைத்து இருப்பதாக கூறியுள்ளார். 

அதற்கான போலி அடையாள அட்டையுடன் கூடிய ஆவணங்களையும் தயார் செய்து, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதத்தையும் தயார் செய்துள்ளார். இதனைவைத்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் முடிந்த நிலையில், இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இவரின் மீது 5 வழக்குகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இந்த சம்பவம் பெண் வீட்டாரை சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Fake NIA DSP Arrest by Police He Cheated Wife Family due to Marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->