நெல்லை: திருச்சபை தேர்தலுக்கு இவ்வுளவு மவுசா?.. தேர்தல் வாக்குறுதியில் அசந்துபோன மக்கள்.! - Seithipunal
Seithipunal


வீட்டிற்கு இருசக்கர வாகனம், பட்டுவேட்டி, தையல் இயந்திரம் வழங்குவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதியை அளித்து, தேர்தல் அரசியலை விஞ்சும் பொருட்டு நடைபெற்று வரும் திருச்சபை மண்டல பொறுப்பாளர்கள் தேர்தல் வாக்கு சேகரிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட பெருமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மண்டலத்தில் பிரிக்கப்பட்டுள்ள 115 ஊர்களில் கிடைக்கும் வாக்குகளை வைத்து, மண்டல அளவிலான கல்விக்குழு தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

இந்த சபையின் கீழ் தேவாலயங்கள், 120 பள்ளிகள், ஒரு பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த தேர்தலில் டி.எஸ் ஜெயசிங் அணி மற்றும் வேதநாயகம் அணி என்ற இரண்டு அணிகள் களமிறங்கும் நிலையில், சிவந்திபட்டி சபை கொங்கந்தன்பாரை ஊரில் உறுப்பினர்களின் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் இருவர் வினோதமான வகையில் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்து வந்தது தெரியவந்துள்ளது. 

மேலும், தாங்கள் வெற்றி பெற்றால் சிவந்திபட்டி கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தின் வீட்டிற்கும் ஹோண்டா ஆக்டிவா வாகனம் இலவசம், பிரதி மாதம் முதல் ஞாயிற்று கிழமையில் மட்டன் பிரியாணி, 18 வயது முதல் 20 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளில் இரண்டு பட்டுப்புடவை, ஆண்களுக்கு இரண்டு வேஷ்டி சட்டை, பெண்கள் சுயதொழில் தொடங்க தையல் மிஷின் இலவசம் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இந்த விஷயங்களுக்கு பணம் எப்படி கிடைக்கும் என வேட்பாளர்களிடம் வினவுகையில், " தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அனைத்தையும் பொதுமக்களுக்கு செய்துவிடுவோம் " என தெரிவித்து அதிரவைத்தனர். 

ஆகமொத்தம் தனியார் அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ அல்லது அரசோ மக்களுக்கு செய்யவேண்டும் என்று நினைத்தால் நொடிப்பொழுதில் அனைவரையும் ராஜா போல இருக்க வைக்கலாம். அல்லது குறைந்த பட்ச தேவையையாவது பூர்த்தி செய்யலாம் என்பதை போல இவர்களின் தேர்தல் வாக்குறுதியும், அதற்கான நிதி ஆதாரமும் இருந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Church Comity Election Promises Shocking


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->