திமுக அதை பற்றி பேச அருகதையே கிடையாது - மண்ணை அள்ளி போட்டுடாதீங்க - பொன். இராதாகிருஷ்ணா பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திமுக கட்சியினர் நீட் தேர்வு குறித்து பேச அருகதையே கிடையாது, அவர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கொரோனா 3 ஆவது அலை ஏற்படுமா? ஏற்படாதா? என்ற விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் பிரதமர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். 

பொதுமக்கள் அனைவரும் அரசு சொல்லும் வழிமுறையை கடைபிடித்து செயல்பட வேண்டும். நீட் தேர்வுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மத்திய அரசு மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் வருட காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் பேசவில்லை. நீட் தேர்வு வாயிலாக மாணவர்கள் சாதிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்களின் வாழ்க்கையில் மண்ணை வாரி தூற்ற வேண்டாம். 

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் வருடம் வரை 189 அரசு மருத்துவ கல்லூரியும், 215 தனியார் மருத்துவக்கல்லூரியும் இருந்தது. தற்போது 289 அரசு மருத்துவ கல்லூரியும், 269 தனியார் மருத்துவக்கல்லூரியும் உள்ளது.

கடந்த 6 வருடத்தில் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 56 விழுக்காடு அதிகரித்துள்ளது. நீட் குறித்து பேச திமுகவினருக்கு அருகதை இல்லை. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின் படி மோடி அரசின் திட்டங்களை வீடுதோறும் எடுத்துரைப்போம் " என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli BJP Former Central Minister Pon Radhakrishnan Pressmeet 1 August 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->