அதிகாலையிலேயே சோகத்தை ஏற்படுத்திய திண்டிவனம் விபத்து.. நிவாரணம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சார்ந்த குடும்பத்தினர் சென்னையை நோக்கி பயணம் செய்ய முடிவு செய்து, நேற்று இரவு கார் மூலமாக சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர். இவர்கள் வந்த கார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே வந்துகொண்டு இருந்த நிலையில், கார் வாகன ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அங்குள்ள தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த காரில் மொத்தமாக 8 பேர் பயணம் செய்த சூழலில், குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், காயமடைந்த 2 பேர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், சென்னைக்கு விரைந்த குடும்பத்தினர், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது தமிழக மக்களிடையே அதிகாலையிலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான தகவலை அறிந்த முதல்வர் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் புதுக்கோட்டையில் விபத்து ஏற்பட்டு மொத்தமாக 9 பேர் பலியான செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். குடும்பத்தினரை இழந்து வாடும் நபர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tindivanam accident peoples died CM Edappadi Palanisamy regret


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->