டிக்டாக் மற்றும் மியூசிக்கல் லி ஆப்பை போட்டுத்தள்ளுங்க... திக்குமுக்காடிப்போன ஈரோடு ஆட்சியர் அலுவலகம்..! - Seithipunal
Seithipunal


சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் டிக்டாக் மற்றும் மியூசிக்கல் லி ஆப்-ஐ தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் சீன நாட்டை சார்ந்த பைட்- டான்ஸ் என்றநிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிக் டாக் ஆப்பில் 15 விநாடிகளுக்குள் தங்களின் கருத்தை படம்பிடித்து வெளியிட முடியும்.

இதனைபயன்படுத்துபவர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆபாசத்துடன் ஆடல் பாடல்கள்மற்றும் நடனத்துடன் ஆபாச கருத்துகளை பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு எவ்வித கட்டுப்பாடோ தணிக்கையோ இல்லை.

இதனால், ஆபாசம் நிறைந்த பாடல்களை பாடுவதும், திரைப்படங்களில் வரும் பாடலுக்கு ஏற்ற வகையில் அங்க அசைவுகள் போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதில் இடம் பெறும் பலபதிவுகள்பெண்களை இழிவு படுத்துகின்றன.

மேலும், உலகில் பெரும்பாலான நாடுகளில் டிக் டாக் மற்றும் மியூசிக்கலி ஆப் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கிடையே பாதிப்பு ஏற்படுத்தியதால், இந்தோனேசியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் இதனை பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.எனவே, இந்தியாவில் இளையதலைமுறையினர் குறிப்பாக குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் குடும்ப பெண்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் டிக் டாக் மற்றும் மியூசிக்கலி ஆப் ஐ பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் பேரவை சார்பில் ஆர்.வடிவேலு தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரி சி.கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tik tok app should be ban


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->