ஊட்டி || பசு மாட்டை வேட்டையாடிய புலியால் அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்துஸ்தான் போட்டோ பிலீம் தொழிற்சாலை அருகில் ஓ.சி.எஸ் காலனியில் கடந்த சில நாட்களாக ஒற்றை புலி நடமாட்டத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அந்த புலி பசு மாடு ஒன்றை வேட்டையாடியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இந்த நிலையில் அதே புலி இன்று மற்றொரு பசுமாட்டை வேட்டையாடி உள்ளது. பசு மாட்டின் அருகில் அமர்ந்து உண்ணும் காட்சி அப்பகுதி மக்களை பெரும் அச்சமடைய செய்துள்ளது. இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை தற்போது இயங்காத நிலையில் அந்த பகுதி முழுவதும் புதர் அடர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. அந்தப் பகுதியில் சிறுத்தை, கரடி, புலி உட்பட பல விலங்குகளில் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் புனிதமாக செயல்பட்டு ஒற்றை புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

புலி வேட்டையாட பசு மாட்டின் அருகில் நின்று பார்க்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiger hunted a cow in ooty


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->