தேனி சுகந்தி கொடுத்த புகாரின் பேரில், திவ்யா கள்ளச்சியை நாகையில் கைது செய்தது காவல்துறை.! - Seithipunal
Seithipunal


டிக் டாக் என்ற மாய உலகில், அதனை உலகமென நம்பியுள்ள பல நபர்கள் அதிலேயே திருமணம் செய்து, குடித்தனம் நடத்தி வருகின்றனர். இதில், அவரவர் வீடுகளில் நடக்கும் பிரச்சனையை பொதுவெளியில் பேசி திட்டி தீர்ப்பதை போல, ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தையால் விமர்சித்து தங்களை பெரிய ஆட்கள் போல காண்பித்துக்கொள்கின்றனர். 

விரைவில் டிக் டாக் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லம் என்ற மனநல காப்பகம் ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் கூட்டங்கள் நிறைந்து வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக் டாக் செயலி இந்தியாவை விட்டு சென்றாலும், அதன் தாக்கம் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில், டிக் டாக்கில் திவ்யா கள்ளச்சி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, காதலன் கார்த்தியை தேடி பல சர்ச்சையில் சிக்கிய பட்டதாரி பெண்மணி திவ்யா கள்ளச்சி. இவர் டிக் டாக் முட்டுச்சந்தில் பிரபலமான நடுத்தர வயது பெண்மணியாக இருந்து வந்த தேனியை சார்ந்த சுகந்தி என்பவரை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, சுகந்தி இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் திவ்யாவை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் தன்னை கைது செய்திடுவார்கள் என்று பயந்து ஊர் ஊராக சென்று தலைமறைவாகியுள்ளார். 

கடலூர், வடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, சென்னை என பல ஊர்களுக்கு சென்று தலைமறைவாகி வீடியோ பதிவு செய்து வந்த திவ்யா, நாகப்பட்டினத்தில் இருப்பதாக தகவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நாகப்பட்டினம் காவல் துறையினருக்கு தேனி காவல் துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர். 

திவ்யா நாகப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் இருப்பது உறுதியாகவே, அவர் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கைது நடவடிக்கைக்கு முன்னதாகவும் திவ்யா தன்னை காவல் துறையினர் பிடிக்க வருகிறார்கள் என வீடியோ பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tic Tok Famous Divya Kallachi Arrested by Police At Nagapattinam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->