'மரமேற ஆட்கள் கிடைப்பதில்லை' என புதிய யுக்தியை கையாளும் ஊர் மக்கள்!! உடன்குடி கருப்புக்கட்டிக்கு ஏற்பட்ட சோதனை!!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி உடன்குடி கருப்பட்டி என்றாலே ஒரு தனிச் சிறப்பு இருக்கின்றது. ஊர் பெயரோடு உலா வரும் இந்த கருப்புக்கட்டி, உடன்குடி வட்டார பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பனை மரத்தில் வளரும் பாளைகளை விவசாயிகள் பக்குவப்படுத்தி கலசம் கட்டி அதிலிருந்து தண்ணீரை இறக்கி கருப்புக்கட்டி காய்ச்சுகின்றனர்.

மாலையில் ஏறி பாளையை சீவி விடும் விவசாயிகள் தினமும் காலை, மாலை என இரு முறையும் மரத்தில் ஏறி இறங்க வேண்டும் .மேலும், ஜூன், ஜூலை, ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் இந்த தொழில் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறும்.

பனை மரத்தில் ஏறி இறங்குபவர்கள் இரு கால்களையும் சேர்த்து நார் போட்டு ஏறுவார்கள். ஏறும்பொழுது நெஞ்சில் காயம் ஏற்படாமல் இருக்க தோலை முன்பக்கமாக போட்டுக் கொள்வார்கள். ஆனால், இது போன்று தினமும் ஏறி இறங்க ஆள் கிடைக்காததால், தற்போது ஏறும் முறையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

மேலிருந்து கீழ் வரை தடுப்புகளை வைத்து கட்டுகிறார்கள். இது ஒரு ஏணி போல் அமைந்து விடுகிறது. இதில் மளமளவென ஏறி பதநீரை எடுத்துவிடுகின்றனர். இதனால் காயங்கள் தழும்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. 

இதுகுறித்து முருகன் என்பவர், " பனைத்தொழில் வருடா வருடம் குறைந்து வருகிறது. இவ்வாறு, அழிவதற்கு காரணம் மரம் ஏற ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால்தான் இந்த புதிய முறை கையாளப்படுகிறது. இந்த முறையில் மரம் ஏற பலர் தயாராக இருக்கின்றனர்." என கூறியுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thuthukudi udankudi karuppukkati


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->