லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் மேலும் 5 பேரிடம் ரகசிய விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை சம்பவத்தில், திருவாரூரைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கடையில், சுவரில் துளையிட்டு உள்புகுந்து கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளை அடித்து சென்றார்கள்.

இது குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. நடத்தப்பட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் என்பவன் மற்றும் சுரேஷ் என்பவன் இருவரும் இந்த கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டது அம்பலமானது. 

அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாய் ஆகியோரை போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.

முருகன், சுரேஷ் ஆகியோரின் உறவினர்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று 15 பேரைப் பிடித்து தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 

அதில் திருமாறன் என்பவரை விடுவித்தனர். தற்போது சுரேஷின் உறவினர்களான சீராத்தோப்பைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேரைப் பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொள்ளையடிக்கப்பட்டதில், நான்கரை கிலோ தங்கம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நகைகளை மீட்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thrichy robbery case investigation to 5 members


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->