வாணியம்பாடி அருகே தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 3 பேருக்கு மூச்சுத் திணறல்.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடி அருகே தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி, 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் தனியார் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது.

இங்கு தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பம்பு அறையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் 3 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென்று கழிவுநீர் வெளியேறியதையடுத்து விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் நவீன் குமார் என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three people suffocated due to poison gas attack at leather sewage treatment plant


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->