மின் தடையால் 3 நோயாளிகள் அடுத்தடுத்து மரணம்..போராட்டத்தில் குதித்த உறவினர்கள்..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் தடை காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் தடை ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதிப்பட்டதாகவும் அந்த ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றசாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, மின்தடை ஏற்படுவதற்கும் ஆக்சிஜன் வழங்குவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது, சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகளின் இறப்பிற்கு வேறு உடல் உபாதைகள் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three members continuously died in government hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->