கானா பாடலை சத்தமாக வைத்து அரிவாளுடன் குத்தாட்டம்.. வீடியோ வெளியானதால் வாலிபர் கைது..! - Seithipunal
Seithipunal


சத்தமாக போட்டுப்போட்டு அரிவாளை வைத்து வீடியோ எடுத்து கெத்துக்காக வாட்சப்பில் பரப்பிய அரை போதை அலப்பறை ஆசாமி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர், நெப்போலியன் - குஷ்பூ நடிப்பில் வெளியான எட்டுப்பட்டி ராஜா திரைப்படத்தில் உள்ள " பஞ்சு மிட்டாய் சீலை கட்டி, பட்டு வர்ண லவுக்கை போட்டு கஞ்சி கொண்டு போறவளே, நெஞ்சுக்குள்ள நீ வாரியா " என்ற பாடலுக்கு கையில் அரிவாளுடன் வைத்து அரை போதையில் ஆடினார். 

இரண்டு கைகளிலும் இரண்டு வெவ்வேறு வகை அரிவாள் என வைத்துக்கொண்டு, அரை போதையில் தள்ளாடியபடி இளைஞர் ஆடிய ஆட்டம் தொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள வாட் சாப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. 

இந்த வைரல் வீடியோ குறித்த விஷயம் காவல் துறையினரின் பார்வைக்கும் செல்ல, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து, இது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், அரிவாளுடன் ஆட்டம் போட்டவர் மணக்கரை பிள்ளையார்கோவில் பகுதியை சார்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சுப்பையா (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் சத்தமாக பாட்டு வைத்து அரிவாளுடன் ஆடியது போன்ற வீடியோ பதிவு செய்யப்பட்டதும் உறுதியானதை தொடர்ந்து, சுப்பையா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், " மக்களை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது அச்சுறுத்ததாக வகையிலோ கைகளில் பயங்கர ஆயுதத்துடன் பதிவு செய்யப்படும் விடியோக்கள் இணையத்தில் வெளியானாலும், நீங்கள் பிறந்தநாள் என்ற பெயரில் தெருவில் கேக் வெட்டி கொண்டாடும் போது காவல் துறை அதிகாரிகள் பார்த்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், இவ்வாறு செய்யப்படுவது சட்டத்திற்கும், பொது அமைதிக்கும் எதிரானது எனபதால், உங்களின் மீது வழக்குபதியப்பட்டு கைது செய்யப்படுவீர்கள் " என்று எச்சரித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Youngster Arrest by Police When His Video Trending Social Media Gana Song Dance with Weapon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->