திருட்டு சரக்கை பெருந்தன்மையுடன் பங்கு போட்டு கொடுத்த குடிமகன்கள்.. மாத்திரை போதை சரியில்லை என்று மல்லுக்கட்டு..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி மார்க்கெட் பகுதியில் இருக்கும் மதுபான கடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மர்ம கும்பல் ஒன்று மதுபானங்களை திருடியுள்ளது. இதற்கு அடையாளமாக மதுபான பெட்டி ஒன்று உடைந்தது, பாட்டில்களும் உடைந்து அங்கே கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாது சுவற்றில் இரத்தத் துளிகளும் காணப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், திருடனுக்கு உடலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த பகுதியில் குடிபோதையில் சுற்றிய நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், மது எங்கிருந்து வந்தது? என்பது குறித்து விசாரித்துள்ளனர். 

கால்களில் கட்டுடன், சார்லஸ் என்ற பெயரை கொண்ட லொடுக்கு பாண்டி போல இழுத்து இழுத்து நடந்த குடிமகன் உண்மையை கக்கியுள்ளான். இதன்பின்னர், இவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஊரடங்கின் காரணமாக மதுபான கடை மூடப்பட்டுள்ளதால், மது அருந்த முடியாமல் கடுமையாக சார்லஸ் தத்தளித்து வந்துள்ளான். 

இவனது நண்பன் மைக்கேலின் மூலமாக, அங்குள்ள கந்தசாமிபுரம் பகுதியை சார்ந்த மெடிக்கல் உரிமையாளர் டேவிட் என்பவனிடம் இருந்து போதை மாத்திரைகளை பெற்றுள்ளனர். போதை மாத்திரையின் போதையும் பத்தாது, டேவிட்டிடம் சென்று போதை மாத்திரை சரியில்லை என்று கூறி போதையிலேயே சண்டையிடவே, மேலும் போதை வேண்டும் என்றால் மதுபானக்கடையை கொள்ளையடிக்க வேண்டும் என்று டேவிட் கூறியுள்ளார். 

இந்த வாக்கினை வேதவாக்காக எடுத்துக்கொண்ட போதை கும்பல், சார்லஸ், மைக்கேல்ராஜ், அந்தோணி மற்றும் பிரவீன் ஆகியோர் சேர்ந்து வ.உ.சி மார்க்கெட் பகுதியில் இருக்கும் மதுபான கடையில் திருடியுள்ளனர். இந்த சமயத்தில், பெட்டியை கைமாற்றும் போது, ஒரு பெட்டி மதுபானம் கீழே விழுந்து உடைந்தது. இதில் சார்லஸின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதற்காக மருத்துவமனைக்கு சென்று கால்களில் கட்டும் போட்டுக்கொண்ட நிலையில், போதைக்கும்பலை கைது செய்த காவல் துறையினர், காவல் நிலையத்தில் வைத்து கட்டம் கட்டி விளையாடிட்டுள்ளனர். போதைக்கும்பலை சார்ந்த 4 பேர் மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த டேவிட் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi wine shop robbery police arrest gang


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->