ஓய்வூதியம் பெற போலியான தகவலுடன் விண்ணப்பம்.. முன்னாள் அரசு அதிகாரியை எச்சரித்த வி.ஏ.ஓ.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலராக பிரேமலதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது நேர்மையான நடவடிக்கையின் மூலமாக, மக்கள் மத்தியில் வீர பெண்மணியாகவும் பார்க்கப்படுகிறார். தமிழக முதலமைச்சரின் புகார் பிரிவிற்கு ஊனமுற்றோர் உதவித் தொகையான ரூபாய் 1500 கேட்டு விண்ணப்பித்த கூலித்தொழிலாளி ஒருவரின் விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதாவின் கவனத்திற்கு வந்துள்ளது. 

இது தொடர்பான மனு குறித்து நேரடியாக சென்று விசாரிக்கையில், அந்த விண்ணப்பத்தில் தெரிவித்தபடி அவர் கூலி தொழிலாளி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலுக்கும், சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்பதும், அவரது மனைவி ஓய்வுபெற்ற துணை பிடிஓ என்பதும் தெரியவந்துள்ளது. 

ஓய்வூதியமாக மட்டும் இவர்களுக்கு மாதம் ரூ.30,000 வரை கிடைக்கும் நிலையில், அவரது மனைவிக்கு பென்ஷன் தொகை ரூ.30 ஆயிரத்தை விட அதிகமாக கிடைத்துள்ளது. அவர்கள் வசிக்கும் வீடு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளது என்பதையும் கண்டுபிடித்த நிலையில், இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் செல்போன் மூலமாக வி.ஏ.ஓ பிரேமலதா விசாரித்தபோது, தன்னை ஜவுளி கடை ஊழியர் என்று பதில் தெரிவித்துள்ளார். 

அவர் பேசிய அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்த பிரேமலதா, பின்னர் விசாரணை செய்த போது என்னென்ன தகவல் சேகரித்தார் என்பதை கூறியுள்ளார். இதனையடுத்து தான் மட்டுமல்லாது, தன்னுடன் பணியாற்றிய பல அரசு ஊழியர்களும் இதுபோன்று மோசடி செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பதிவு செய்துள்ளார்.  இதனையடுத்து மோசடி செய்து வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை செய்து மக்களின் பணம் வீணாக செல்வதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi VAO Discovered Cheating Farmer Govt Employees


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->