தூத்துக்குடியில் இருந்து அயோத்திக்கு 600 கிலோ எடையுள்ள மணி.. பாத்திரக்கடை உரிமையாளர் அசத்தல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் பிரம்மாண்டமான இராமர் கோவில் அமையவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 5 ஆம் தேதியன்று பூமி பூஜை நடைபெற்றது. 

இந்த கோவிலின் கட்டுமான பணிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கோவிலில் அமைக்கப்படும் பிரதானமான மணி உருவாக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள 2100 எடை கொண்ட மணியின் ஒலி, 15 கிமீ தொலைவிற்கு கேட்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பகுதியை சார்ந்த ராமகிருஷ்ண நாடார் பாத்திரக்கடையில் இருந்து 600 கிலோ எடையுள்ள மணி, அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அனுப்பப்படவுள்ளதாக வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும், அயோத்தி கோவிலின் கட்டுமான பணிகள் அனைத்தும் மூன்றரை வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் 2024 ஆம் வருடத்தின் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கோவில் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi to Ayodhya Ring to Sri Ramar Temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->