ரூ.3 க்கு இட்லி வாங்க காத்திருக்கும் கிராம மக்கள்..! மூதாட்டி உச்சிமாகாளியின் நெகிழ்ச்சி செயல்.!! - Seithipunal
Seithipunal


ரூ.3 க்கு இட்லி விற்பனை செய்து வரும் மூதாட்டியின் பாரம்பரிய தயாரிப்பு உணவை சாப்பிட கிராம மக்கள் காத்திருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகேயுள்ள தோப்புவளம் கிராமத்தை சார்ந்தவர் உச்சிமாகாளி (வயது 90). இவர் அப்பகுதியில் கடந்த 25 வருடமாக மலிவு விலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார். 

இதற்காக ஆட்டு உறலில் உளுந்து மற்றும் அரிசியை வைத்து இட்லி மாவு அரைத்து, பழங்கால முறைப்படி அதனை பக்குவப்படுத்தி வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவற்றை விறகு அடுப்பில் தயார் செய்து, அதனை அங்குள்ள கிராமங்களுக்கு நடந்து சென்றே விற்பனை செய்து வருகிறார்.

ரூ.1 மற்றும் ரூ.2 க்கு பல வருடமாக இட்லி விற்பனை செய்து வந்த மூதாட்டி, மூலப்பொருட்களின் விலை உயர்வால் தற்போது ரூ.3 க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரின் இட்லி சுவைக்கே அது விற்பனையாகிவிடும். இதற்காக தனி ரசிகர் கூட்டமே அங்குள்ள கிராமங்களில் இருக்கிறது. 

மேலும், மலிவு விலையில் வீடுதேடி வரும் இட்லியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டு வருகின்றனர். தள்ளாத வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற ஒரே காரணத்தால் பல கிலோமீட்டர் கிராமம் கிராமமாக நடந்து சென்று விற்பனை செய்து வருகிறார். 

இவரது மகன் திசையன்விளை பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர் பலமுறை தாயை குடும்பத்துடன் இருக்க அழைத்தும் வராமல் சொந்த ஊரில் உழைத்து சாப்பிட்டு வருகிறார். மேலும், எனக்கு இந்த வாழ்க்கை பிடித்துள்ளது என்றும் மகனிடம் தெரிவித்துள்ளார். இதனால் மகனும் தாயின் ஆசைக்கு தடையாக இருக்காமல், அவரின் விருப்பப்படியே சொந்த ஊரில் வசிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Sathankulam Aged Lady Uchimakali Sales Idly for Rs 3 Making Cultural Method


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->