ஜெயராஜ், பெண்ணிக்ஸ் கொலை வழக்கு.. மக்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியை சார்ந்த தந்தை, மகனான பெண்ணிக்ஸ் மற்றும் ஜெயராஜ் காவல்துறையினர் விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ வசம் தற்போது மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயராஜ், பெண்ணிக்ஸ் காவல் நிலையத்தில் வைத்து கொடூர கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த மரண வழங்கி சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளை கைது செய்தனர். மேலும், பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ ஏற்றுள்ளது. இனி சி.பி.ஐ இந்த விசாரணையை நடத்தும். 

மேலும், சி.பி.ஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று கூறி தமிழக முதல்வர் உள்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக மந்திரி அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சி.பி.ஐ விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Sathaankulam Jeyaraj Fenix Murder case CBI Commit Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->