திருமகன் பட பசும்பொன் பாடலுடன் அரிவாள் வைத்து வீடியோ.. மன்னிப்பு கேட்ட சிறார்கள்.! - Seithipunal
Seithipunal


ஜாதிய ரீதியான பாடலுடன் அரிவாளை கையில் வைத்து பாடல் வெளியிட்ட சிறுவன் காவல் துறையினர் ஆலோசனைக்கு பின்னர் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட சுற்று வட்டாரத்தில் இருக்கும் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஒரு சிறுவனின் சாதிய ரீதியான பாடல் வசனங்கள் மற்றும் கையில் அரிவாளுடன் பாடல் பாடியது போன்ற வீடியோ வைரலாகியது. நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் திருமகன் படத்தில் உள்ள பிறந்தது பசும்பொன்னு, இது வீரமுள்ள தமிழ் மண்ணு என்ற பாடலுக்கு சிறுவன் அரிவாளுடன் பாடினார்.

இந்த வீடியோ காவல்துறையினர் கவனத்திற்கு செல்லவே, காவல்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுவன் விடியோவை பதிவு செய்து வெளியிட்டியுள்ளார் என்பது உறுதியானது. இதனையடுத்து, சிறுவனை அவனது பெற்றோர் முன்னிலையில் விசாரணை செய்துள்ளனர். 

இதன் போது, பக்கத்து ஊரைச் சார்ந்த வேறு ஜாதி இளைஞர் தனது கூட்டாளியான 16 வயது சிறுவனை தாக்கியதால், அவர் அந்த இளைஞனுக்கு மிரட்டல் விடுப்பதற்காக கூட்டாளியின் தூண்டுதலின்பேரில் வீச்சரிவாளுடன் பாடல் பாடி வீடியோ வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். 

தாங்கள் செய்தது தவறு என்றும், இது போன்ற செயல்களை செய்ய கூடாது எனவும் காவல் துறையினர் எச்சரித்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும் காவல் அதிகாரிகள் கண்டித்தனர். மேலும், பள்ளி சிறுவர்கள் இருவரும் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று இரண்டு சிறுவர்களும் பெற்றோர் முன்னிலையில் மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டனர். 

இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. கதாநாயகர்கள் கையில் அட்டைக்கத்தி மற்றும் அரிவாளுடன் வீரவசனம் பேசிவிட்டு சென்று விடும் நிலையில், இவர்கள் தங்களை ஒரு கதாநாயகன் போல பாவித்து இதுபோன்ற சம்பவங்களை கையில் எடுப்பது அரங்கேறி வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Ottapidaram Child Regret to Caste Related Video Release with Weapon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->