பட்டப்பகலில் கத்தியால் நண்பனை சரமாரியாக குத்தி கொலை செய்த நட்பூ.. தூத்துக்குடியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுனரை 2 பேர் கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் நடுரோட்டில் நடந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பி.என்.ஜி காலனி பகுதியை சார்ந்தவர் சிவபெருமான். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். கொம்பையர் காலனி பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது தம்பி சுவர்ண ராஜ். இவர்கள் மூவரும் நண்பர்கள். 

நண்பர்களான இவர்கள் 3 பேரும் தினமும் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று தூத்துக்குடி சிதம்பரம் நகர் பொய்யாவாடி அருகேயுள்ள பூங்காவில் அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.

இதன்போது இவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்படவே, ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தம்பி சுவர்ண ராஜின் உதவியுடன் சிவபெருமாளை கத்தியால் பலமுறை சரமாரியாக குத்தி கொலை செய்து இருக்கின்றனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிவபெருமாளை காப்பாற்ற முயன்றும் பலனில்லை. போதை கும்பல் பொதுமக்களையும் மிரட்டியுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற நபர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடவே, இது பெரும் வைரலாகியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய அதிகாரிகள், கொலையாளிகள் ஆறுமுகம் மற்றும் அவனது தம்பி சுவர்ண ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர். நடுரோட்டில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் மதுபோதையில் பலரையும் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த கொடூர சம்பவமும் நடந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Man Murder at Day Time Road Side Drunken Culprits 2 Arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->