மீசை கூட முளைக்காத வயதில் காதல்.. சந்தேகம், வரதட்சணை கொடுமைக்கு பலியான பச்சிளம் குழந்தை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண லிங்கம். இவரது மனைவி முத்துமணி. லட்சுமண லிங்கத்திற்கு 19 வயதாகும் நிலையில், முத்து மணிக்கு 18 வயது ஆகிறது. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தைக்கு கிருஷ்ண லிங்கம் கதிர் என்ற பெயரை சூட்டியுள்ளனர். 

இவர்கள் இருவரும் திருப்பூரில் தற்போது தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், முத்துமணி நடத்தை மீது சந்தேகம் கொண்ட லட்சுமண லிங்கம், அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். 

இதுமட்டுமல்லாது, வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்த நிலையில், முத்துமணி கடந்த சில மாதமாக சொந்த ஊருக்கு வந்து தனது பெற்றோரின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி கிளாக்குளத்திற்கு வந்த லட்சுமண லிங்கம், முத்துமணியிடம் மீண்டும் தகராறு செய்யவே, லட்சுமணன் தாக்கியதில் மனைவி மற்றும் அவரது மூன்று மாத குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதனையடுத்து முத்துமணியின் உறவினர்கள் இலட்சுமண லிங்கம் மற்றும் அவரது தந்தை பெரியசாமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடவே, ஸ்ரீவைகுண்டம் காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து குழந்தையின் உடலை பெற்றுக் கொண்ட முத்துமணியின் குடும்பத்தினர், குழந்தையின் உடலை நல்லடக்கம் செய்தனர். அறியாத வயதில் காதல் என்ற மாய உலகிற்குள் விழுந்து, திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கி, இரண்டு வருடத்திற்குள் சந்தேகம் மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக மூன்று மாத குழந்தை பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Love Marriage Culprit Murder Baby due to Wife Activity Doubt and Dowry Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->