ஏலே ஓடுங்களே.. சந்தைக்கு அத்துமீறி வந்த பொதுமக்களுக்கு கொரோனா சோதனை.. தலைதெறிக்க ஓடிய மக்கள்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் வீடுகளில் வாகனம் மூலமாக காய்கறிகளை விற்பனை செய்ய தற்காலிக சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு காய்கறி விற்பனை செய்ய அனுமதி வாங்கியுள்ள நபர்கள், தங்களின் அடையாள அட்டை மற்றும் வாகனத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 

இந்நிலையில், இந்த சந்தை தொடர்பான விபரத்தை அறிந்த அப்பகுதி உள்ளூர் பொதுமக்கள், சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்ல குவிந்தனர். இந்த விஷயத்தை அறிந்த சுகாதாரத்துறையினர், காவல்துறை அதிகாரிகளுடன் விரைந்து பொதுமக்களை மடக்கி பிடித்தனர். 

பின்னர், அவர்களுக்கு சந்தையில் வைத்தே கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிலர் கொரோனா சோதனைக்கு பயந்து தடுப்பு வேலிகளில் ஏறிக்குதித்து தப்பி சென்றனர். தங்களின் வாகனத்தையும் அவர்கள் அங்கேயே விட்டுவிட்டு ஓடினர். இதனையடுத்து, காவல் துறை அதிகாரிகள் தப்பி சென்றவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

அங்கேயே இருந்திருந்தால் இலவசமாக கொரோனா சோதனையாவது நடந்து முடிந்து, சோதனைக்கு பின்னர் கொரோனா இல்லை என்ற மகிழ்ச்சி செய்தியுடன் இருந்திருக்கலாம் அல்லது சில நூறு, ஆயிரம் அபாரதத்துடன் முடிந்திருக்கும். 

வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கால்கடுக்க நிற்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தலைதெறிக்க ஓடிய பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Kovilpatti Tempravorily Market Visiting Publics Spot Test Corona by Officials 27 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->