#புரெவிபுயல்: தூத்துக்குடி மாவட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகேயுள்ள பாம்பனில் புரெவி புயல் நிலைகொண்டுள்ளதாகவும், புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பாம்பனில் புயல் நகரும் போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், 16 கிமீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 3 மணிநேரத்திற்கு புரெவி புயல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் நிலைகொண்டு இருக்கும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், " இன்று மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், புரெவி புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மக்கள் வீட்டிலேயே இருக்கு வேண்டும் " என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Collector Senthil Raj Warn District Peoples about Purevi Cyclone 3 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->