பார்ப்பவர் கண்களுக்கு பிரம்மிப்பை அளிக்கும்... தூண்பாறை...!! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் இருந்து ஏறத்தாழ 7கி.மீ தொலைவிலும், பழனியில் இருந்து ஏறத்தாழ 72கி.மீ தொலைவிலும், திண்டுக்கலில் இருந்து ஏறத்தாழ 104கி.மீ தொலைவிலும், பெரிய குளத்திலிருந்து ஏறத்தாழ 77கி.மீ தொலைவிலும் அமைந்து அனைத்து சுற்றுலாப்பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது தூண்பாறை.

கொடைக்கானல் அழகிய ஓவியமான மலைவாழிடம். மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது.

எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இதை 'மலைகளின் இளவரசி" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, கடும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வெயில் காலங்களில் இங்கு வருவது வழக்கம். 

வருடம் முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருக்கும். 

கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று.

இங்கே செங்குத்தாக காணப்படும் பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது. 

இந்த பாறைகள், பார்ப்பவர் கண்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும்.

இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம்.

இந்த தூண்களுக்குள் இருக்கும் இடுக்குகள் மிகவும் ஆழமானது. 

எனவே, இது மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுகிறது. 

தூண்பாறை தமிழ்நாடு வன இலாக்கா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

பல நேரங்களில் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும்.

கோடை விடுமுறையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழிக்க, தமிழகம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்தும் இக்காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoonparai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->