சூரியனே பார்க்காத கிணறு... பார்ப்பவர்களை வியக்கும்.. தியாகதுருகம் மலைக்கோட்டை..! - Seithipunal
Seithipunal


தியாகதுருகம் மலைக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சுமார் 65கி.மீ. மேற்கே தியாகதுருகம் என்ற ஊரில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து கிழக்கே சுமார் 13கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் 400 அடி உயரத்தில் இந்த மலைக்கோட்டை அமைந்துள்ளது.

சிறப்புகள் :

குன்றின்மேல் அமைந்துள்ள இந்த தியாகதுருகம் மலைக்கோட்டையில் ஏறி நின்று பார்த்தால் ஊரின் அழகு தெரியும்படி 400 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோட்டையின் மேற்குப்புறத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையே அருகர் குகைக்கோவில் உள்ளது.

மலைக்கோட்டையில் சூரியன் பார்க்காத வகையில் கிணறு ஒன்றுள்ளது.

இந்தக் கோட்டையில் பல இடங்களில் பதுங்கு குழிகளும், தாமரைகுளமும் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

இக்கோட்டையில் தானியக்கிடங்குகள், குதிரை மற்றும் யானை போன்ற விலங்குகளின் கொட்டில்கள் இன்றும் மறையாமல் உள்ளது.

அக்காலத்தில் போரின் போது எதிரிகளை தாக்க பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் இன்னும் நினைவுச் சின்னங்களாக இங்கு காணப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiyagadurgam malaikottai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->