தினகரன் நடத்துவது ஒரு சாதிக்கட்சி!! திவாகரன் அதிரடி!! அடுத்தடுத்த சம்பவங்களை போட்டுடைத்ததால் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


இன்று கோவையில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் திவாகரன், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் அங்கு சாப்பிடவில்லை.

அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர்களது உறவினர்களும் அங்கு தான் உண்டனர். மேலும், அப்பல்லோவில் உணவு விலை அதிகம் அதனால் தான் அதிகம் பில் வர காரணம்.

இன்று சசிகலாவின் மீது குற்றம் சொல்பவர்கள் அன்று சசிகலா காலில் விழுந்தவர்கள் தான், அவர்கள் என்ன அன்று கோமாவிலா இருந்தார்கள்? ஜெயலலிதா இறப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் நான் ஆஜராகினேன்.

என்னிடம் குறிப்பிட்ட சில கேள்விகள் தான் கேட்கப்பட்டன. ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரை சரியான வழி காட்டுதல் இல்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம்.

நான் சசிகலா குடும்பத்தை விட்டு தனியாக வந்து கட்சி துவங்கிவிட்டேன். தற்பொழுது எனது கட்சிக்கு நிர்வாகிகள் அமைக்கும் பொறுப்பில் ஈடுபட்டு வருகின்றேன். தினகரன் நடத்துவது ஒரு ஜாதிக்கட்சி. அதில், தனது குடும்பத்தினருக்கு மட்டுமே பதவிகள் வழங்குகிறார்.

எல்லோரும் எங்களது உறவினர் தான். தேர்தலில் டி.டி.வி. தினகரன் தனக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என நினைக்கிறார். அவர் ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் கொடுத்து தான் ஜெயித்தார். 20 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கவில்லை என்றால் அவர் ஜெயித்திருக்க வாய்ப்பே இல்லை. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thivagaran says ammk is based on caste


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal